புதியவை

மாற்றம் நோக்கி - மிஹிந்தலைஏ.பாரிஸ்


பெண்மையென்று
பூவிதழ் உரைத்து விட்டால்
அடக்கமும் கற்பும்
அன்பும் தாய்மையும்
பெண்ணின் சிறப்புக்குள்
பெருமையுடன் புகுந்து கொள்ளும்!


ஆண்மையென்று
வாய் விரித்து விட்டால்
வலிமையும் வீரீயமும்
ஆணவமும் ஓடிவரும்
ஆணின் புகழ்
வானிலும் ஒலிக்கும்!


ஆகவே!
இரண்டையும் இணைத்துத்தான்
ஒரு இனம் படைத்தான்
இனத்துக்குள்
இரு வேறு பிரிவு!
பிரிவுக்குள் இன்று
பலவித முறிவு!


அறிவு கூர்மையெல்லாம்
நெருப்பில் எரியுது
இறைவன் பெயரில்
இனமும் அழியுது!

மனிதனிடம்
மனித அடையாளம் இல்லை...!
 மனிதன் எனும்
வலயத்திற்குள் அழைத்துச்செல்வது
இரக்கம் எனும்
இதய கீதம்
அது இறக்கும் வரை 
இருக்க வேண்டும்

இரக்கம் இருந்தால்
ஈகை பிறக்கும்
ஈழம் கேட்டு
ஓலமிட தேவையில்லை!
வக்கிரம் பிடித்து
எவரும் அக்கிரம் 
செய்யத்தேவை இல்லை!

புரட்சிப்படைகள்
புனித இஸ்லாமியப் பெயரில்
ஒரு நாளும் எழாது
போர் எனும் வார்த்தை
அகராதியில் இருந்து
அகற்றப்படும்...!

உலகம்
ஒரு ஒற்றைக்குடை
மனிதன்
அதில் வாழும்
ஒரு உயிரினம்...!

இதயத்தில் 
மனித வரவை சேகரிப்போம்
இரக்க உணர்வை செலவழிப்போம்
ஆண்மை பெண்மை எனும்
பேதம் கூட அழிந்து
மனித மாமிசம் எனும்
மலர்களை தூவுவோம்.
No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.