புதியவை

தியான்ஜி வெடிப்பின் பின்னர் தனது உற்பத்தியை மீள ஆரம்பிக்கும் டொயாட்டோ

தியான்ஜி வெடிப்பின் பின்னர் தனது உற்பத்தியை மீள ஆரம்பிக்கும் டொயாட்டோ

இரசாயன வெடிப்பு காரணமாக அண்மையில் முற்றிலுமாக சேதமடைந்த சீனா துறைமுக நிறுவனத்திலுள்ள டொயாட்டோ நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் படிப்படியாக மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அநத நிறுவனம் அறிவித்துள்ளது.
வெடிப்பின் பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் முடக்கப்பட்டிருந்ததுடன் டொயாட்டோ நிறுவனத்தின் 67 ஊழியர்களும் பலத்த காயமடைந்திருந்தனர். அத்துடன் பல்லாயிரக்கணக்கான வாகனங்களும் சேதமடைந்திருந்தன.
தியான்ஜி வெடிப்பானது 139 பேரது உயிர்களைக் காவு கொண்டிருந்ததுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இங்கு காணப்படும் டொயாட்டோ நிறுவனத்திற்குச் சொந்தமான தொழிற்சாலையில் 12,000 ஊழியர்கள் தொழில் புரிவதுடன் 2014 ஆம் ஆண்டில் மொத்தமாக 440,000 வாகனங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.