புதியவை

உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் முதலிடத்தில்

உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் முதலிடத்தில்

உலகின் இளம் பணக்காரர்கள் பட்டியலில் முகநூல் (facebook) நிறுவனரான மார்க் சக்கபேர்க் (mark Zuckerberg) முதலிடம் பெற்றுள்ளார்.
உலக அளவில் 35 வயதிற்குட்பட்ட பணக்காரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் பேஸ்புக் நிறுவனர்களில் ஒருவரான மார்க் சக்கபேர்க் முதலிடம் பெற்றுள்ளார்.
“வெல்த்-எக்ஸ்” என்ற பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலில் அவருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 41.6 பில்லியன் டொலர்களாகும்.
இந்தப் பட்டியலில் முகநூலின் மற்றொரு நிறுவனர் டஸ்டின் மொஸ்கோவிட்ஸ் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு 9.3 பில்லியன் டொலர்களாகும்.
இளம் பணக்காரர்கள் பட்டியலின் முதல் 20 இடங்களில் பெண்கள் 6 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.