புதியவை

நீயென்பவள்தான் நானாயிருக்கிறேன் மகளே..-வித்யாசாகர்!1
நீ கொடுக்கையில் தான்
முத்தம்
அத்தனை இனிக்கிறது;

நீதான் முத்தத்தை
உதட்டிலிருந்து தராமல்
உயிரிலிருந்து தருகிறாய்..
—————————————————————–

2
எல்லோரும் என்னை
தொப்பை தொப்பை என்று
கிண்டல் செய்கிறார்கள்;

நான் யாரிடமும் சொல்லவில்லை
உனக்கு என்
தொப்பைதான் ரொம்ப பிடிக்குமென்று..
—————————————————————–

3
உனக்கு அடித்தால்
வலிக்குமென்பாய்

நானும் கோபத்தில்
அடித்துவிடுவேன்,

அடித்ததும் நீயழுவாய்
நானும் யாருக்கும் தெரியாமல் அழுவேன்..
—————————————————————–

4
பொதுவாக அப்பாக்கள்
யார் யாருக்கு யாராரோ;

ஆனால்
மகள்களுக்கு மட்டும்
அப்பாக்கள் அப்பாக்கள் தான்..
————————————————

5
மீட்டினால் இசைக்கிறது
வீணை,

நீ மட்டும் தான்
எனை மீட்டி
நீ இசைகிறாய்..
—————————

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.