புதியவை

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பாடசாலைகளின் மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

கல்விப் பொதுத்தராத உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் முன்னெடுக்கப்படும் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளின் 3 ஆம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளன.
உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக 8 பாடசாலைகள் முழுமையாக பயன்படுத்தப்படுதுவடன் அவற்றின் கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் 28 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு இராமநாதன் இந்து கல்லூரி,கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி ,கொழும்பு நாலன்தா கல்லூரி, களுத்துறை குருலுஹோமி மஹா வித்தியாலயம், இரத்தினபுரி பர்கசன் உயர் கல்லூரி,குருநாகல் மல்லியதேவ கல்லூரி,கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி மற்றும் காலி வித்தியாலோக கல்லூரி ஆகிய பாடசாலைகளின் கல்வி
நடவடிக்கைகள் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன.
கல்வி பொதுத்தராத உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இடம்பெறவுள்ள குளியாப்பிட்டி மத்திய மஹாவித்தியாலத்தின் 3 ஆம் தவணைக் கல்வி நடவடிக்கைக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் நடவடிக்கைகளுக்கு 21 பாடசாலைகளை பயன்படுத்தப்படவுள்ளதுடன் அவற்றின் கல்வி நடவடிக்கைகள் அடுத்த மாதம் 15 ஆம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.