புதியவை

சிறுவர்களின் சாட்சி விசாரணைகளின்போது சீ.சீ.டி.வி. கெமராக்களை பயன்படுத்த திட்டம்

சிறுவர்களின் சாட்சி விசாரணைகளின்போது சீ.சீ.டி.வி. கெமராக்களை பயன்படுத்த திட்டம்

மேல் நீதிமன்றங்களில் சிறுவர்களின் சாட்சி விசாரணைகளின்போது சீ.சீ.டி.வி. கெமராக்களை பயன்படுத்தும் திட்டத்தை தயாரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
பகிரங்க நீதிமன்றத்தினுள் சாட்சி விசாரணைகள் இடம்பெறும்போது சிறுவர்கள் மன ரீதியில் அழுத்தங்களுக்கு உள்ளாவதாக அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் கூறினார்.
இந்த நிலைமையை தவிர்ப்பதற்காக நீதிமன்ற அறைக்கு வௌியிலுள்ள வேறொரு அறையினுள் சீ.சீ.டி.வி. கெமராக்களைப் பயன்படுத்தி சிறுவர்களிடம் சாட்சி விசாரணைகளை முன்னெடுப்பதற்கான திட்டமொன்றை தயாரிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நீதியமைச்சுடன் இணைந்து இந்த விடயம் குறித்து கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பிலான யோசனையை விரைவில் நீதியமைச்சிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.