புதியவை

கவிப்பூக்கள்-விஜயகுமார் வேல்முருகன்.


கவிதைகள்
எழுதுகையில்
இருவருக்குள்
சண்டை
மனதிற்கும்
நினைவிற்கும்
மனது கேட்டது
எதனை எழுதுவாய்?
நினைவு கேட்டது
என்னைத் தானே?
மனது கேட்டது
மனதில்
நின்றவளா?
நினைவு
கேட்டது
நினைவில்
நின்றவளா?
இரண்டும்
கேட்டன
ஆம் யார்
உந்தன்
காதலியென்று...
ஆம்
நானே என்னை
கேட்டுக் கொண்டேன்
யார் எந்தன்
காதலியென்று
காதலியே இல்லா
காதல் கவிதை
எழுதிட
என்னை
எதுவோ
தூண்டியதே...
மரமே
உன் மீதுள்ள
காதலால் தான்
கவிதைகளை
நான் காகிதங்களில்
எழுதுவதில்லையோ!
காதலியே
என்னிடம்
நெருங்காதே
உன்னில் நான்
மயங்கியே
என்னில் கவிதைகளை
மறக்கின்றேன்...
காதலியே
போய்விடு
உன் நினைவுகளின்
கவிதைகள்
வரும் நேரமிது..
நினவுகளின்
கவிதைகள்
மறந்துவிடின்
கனவுகளின்
கவிதைகள்
பறந்து வருமே..
காதலியே
என்னிடம்
நெருங்காதே
உன்னில் நான்
மயங்கியே
என்னில் கவிதைகளை
மறக்கின்றேன்... போய்விடு காதலியே!
மனமெனும் காற்றுக்கும்
நினைவெனும் மரத்திற்குமான
காதல் ஊடலில்
உதிர்ந்தன
கவிப் பூக்கள் !
.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.