புதியவை

வெலிமடையில் பெண்கள் இருவர் உட்பட நால்வர் வெட்டிக்கொலை: மூவருக்கு மரண தண்டனை

வெலிமடையில் பெண்கள் இருவர் உட்பட நால்வர் வெட்டிக்கொலை: மூவருக்கு மரண தண்டனை

வெலிமடை, போகஹகும்புர பகுதியில் நால்வரைக் கொலை செய்த சம்பவத்தின் மூன்று குற்றவாளிகளுக்கு பதுளை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் பண்டார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
1990 ஆம் ஆண்டின் ஜூன் மாதமளவில் போகஹகும்புர பகுதியில் இரண்டு பெண்கள் உட்பட நால்வரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட மூவருக்கே நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வெலிமட போகஹகும்புர பகுதியைச் சேர்ந்த மூவரே கொலைச் சம்பவத்தின் குற்றவாளிகளாகக் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.