புதியவை

‘வேண்டாம்’ விழிப்புணர்வுத் திட்டம் இன்று காலி,நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுப்பு

‘வேண்டாம்’ விழிப்புணர்வுத் திட்டம் இன்று காலி,நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுப்பு

தகுதியானவர்களை மாத்திரம் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் இன்றைய தினம் காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் முன்னெடுக்கபடுகின்றது.
சக்தி, சிரச மற்றும் நியூஸ்பெஸ்ட். கெஃபே அமைப்புடன் இணைந்து இந்த விழிப்புணர்வுத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
காலி மாவட்டத்தின் அம்பலாகொடை நகரில் இன்று விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் நுவரெலியா நகரிலும் தகுதியானவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வது தொடர்பிலான விழிப்புணர்வுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வாக்களிப்பின் போது எவ்வாறானவர்களை தெரிவு செய்ய வேண்டும் என்பது தொடர்பிலான விழிப்புணர்வூட்டும் ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களும் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.
இந்த திட்டம் இன்றைய தினம் மாலை நாவலப்பிட்டிய மற்றும் கொஸ்கட பகுதிகளை சென்றடையவுள்ளது.
இதேவேளை எமது மற்றுமொரு குழுவினர் நுவரெலியாவில் விழிப்புணர்வு தொடர்பான திட்டத்தை முன்னெடுத்தனர்.
ஒன்று திரண்ட மக்கள் இந்த திட்டத்திற்கு தமது ஆதரவினை வழங்கியதுடன் ஊழலற்ற, சட்டத்தை மதிக்கும் நபர்களுக்கு வாக்களிப்பதாக உறுதியளிக்கும் வகையில் கையொப்பட்டமிட்டனர்.
இன்று மாலை தலவாக்கலை மற்றும் ஹற்றன் நகர்களை விழிப்புணர்வு குழு அண்மிக்கவுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.