புதியவை

தடாகத்தின் கவினெழில் விருதுகவினுறு கலைகள் வளர்ப்பவர்களை - தமிழ் பேசும் உள்ளங்களை (பன்முக ஆற்றல் கொண்டவர்களை ) இன, மத, வேறுபாடுகளுக்கு அப்பால் நின்று கௌரவித்து வருக்கின்றது
தடாகம் கலை இலக்கிய வட்டம்அரசியல் சார்பற்ற அமைப்பாகும்.
இந்த அமைப்பின் நிறுவனரும், முதன்மை அமைப்பாளரும் கலைமகள் ஹிதாயா ரிஸ்வி என்பவராவார்.
தடாகம் கலை இலக்கிய வட்டம் அண்மையில் கலாசூரி (Kala Suri) விருது கொடுத்து (பன்முக ஆற்றல் கொண்டவர்களை ) கௌரவித்து வருகின்றது
அந்த வரிசையில் இந்தியாவைச் சேர்ந்த பன்முக ஆற்றல் கொண்டசகோதரிகளான
01- பவள சங்கரி திருநாவுக்கரசு
02 -கல்கி சுப்ரமணியம்
03 -ராசாத்தி சல்மா மலிக்
04 -ஷைலஜா
05 - ஜி விஜய பத்மா
ஆகியோரை கௌரவித்தது
இந்த விருது பற்றிய ஒரு தகவலை என் சகபாடிக் கவிஞரும் ,அன்பான நண்பருமான Vathiri C Raveendranஅவர்கள் எனக்கு சொன்னார் அவர்களின் அன்புக்கு மிக்க நன்றி அவர்களின் ஆலோசனைய பெரும் மனதோடு மதிப்பளித்து ஏற்றுக்கொள்கின்றேன்
கலாசூரி (Kala Suri) என்பது இலங்கை அரசினால் "கலை வளர்ச்சிக்காக சிறப்புப் பங்களிப்பை வழங்கிய கலைஞர்களுக்கு" ஆண்டு தோறும் வழங்கப்படும் ஓர் உயரிய விருதாகவுள்ளது
இவ்விருதின் தரம் அரசு வழங்கும்(வித்தியாநிதி) விருதுக்கு அடுத்தபடியானதாக சொல்லப்படுகின்றது
2005ம் ஆண்டுக்குப் பின் இந்த கலாசூரிவிருது அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை மாறாக வருடா வருடம் (கலா பூஷணம்) எனும் விருது வழங்கப்பட்டு வருகின்றது 60 வயதுக்கு மேட்பட்டோருக்கு
இங்கு கலாசூரி விருது வழங்கப்பட்டவர்கள் சிலர்:
மொகிதீன் பேக்
என். கே. பத்மநாதன்
தங்கம்மா அப்பாக்குட்டி
வாசுகி ஜெகதீஸ்வரன்
ஆர். சிவகுருநாதன்
அ. சிவனேசச்செல்வன்
வெற்றிவேல் வினாயகமூர்த்தி
அருந்ததி சிறீரங்கநாதன்
தர்மசிறி பண்டாரநாயக்க[
எம். ஏ. நுஃமான்
ராஜினி செல்வநாயகம்
சு. வில்வரத்தினம்
சுமதி சிவமோகன்
ரி. சனாதனன் போன்றோர்
விருதுகளின் வரிசையில்
சிறீ லங்காபிமான்ய,
தேசபந்து
தே சமான்ய
இலங்கை சாகித்திய விருது
இலங்கை தேசிய விருது
இலங்கைத் தமிழ் மொழி விருது
தமிழியல் விருது இப்படி தொடர்கின்றது
எனவே தடாகம் கலை இலக்கிய வட்டம் (சர்வதேச அமைப்பு இன்ஷா அல்லாஹ் )கலாசூரி விருதுக்குப் பதிலாக (கவினெழில் விருது ) என்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது விரைவில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்கின்றோம்
ஆன் பெண் பன்முக ஆற்றல் கொண்டவர்கள் தமது முழு விபரங்களை இந்த விருதுக்காகஅனுப்பி வைக்கலாம்
அனுப்பவேண்டிய முகவரி ( thadagamwebsite@gmail.com)
நன்றி
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
அமைப்பாளர்
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.