புதியவை

சுதந்திரக்கனவு - பாரதி எழிலவன்

     
கன்னலொடு  கனிவாழை மாமரங்கள்
             கானகமாய் தழைத்துநல் கனிகள்நல்கும்
        தென்னகமும் வடஅகமும் நேசம்கொண்டு
             தெவிட்டாத பாசமதில் வளமைபாய்ச்ச
        விண்ணகமோ எனவியக்கும் வண்ணம்நாடு
             விளங்கியதெல் லாமின்று கனவென்றாக
        திண்ணமுற நினைக்கவல்ல நிகழ்ச்சியெல்லாம்
             திரும்பவரும் எனும்நினைவு கனவுதானே?!

        கங்கையுடன் காவிரியை இணைக்கவேண்டி
             கவிநெய்த பாரதியின் கனவுயெல்லாம்
        பொங்குவள நாடென்னும் பழமைநாட்டில்
             பொலிவுபட விளங்கவேண்டும்கனவுதானே
        மங்கையவள் மாதரசி யாவதற்கு
             மாண்புமிகு கல்விவேண்டும் என்பதெல்லாம்
        செங்கமல மனங்கொண்டோன் ஆவல்தானே
             செம்மையுற செய்வதுநம் டமையன்றோ!

        இப்படியாய் பலருமாகக் கனவுகண்ட
             இந்தியாவின் நிலையின்று கனவாய்ப்போக
        எப்படியும் நம்நாட்டை வளமையாக்க
             இயன்றளவும் உழல்கின்றோர் பலருமுண்டு
        அப்படியும் பலதிட்டம் வகுத்தபோதும்
             அதைத்தடுக்க இடைத்தரகர் முளைப்பதேனோ?
        முப்படையும் நம்நாட்டில் திறமைகொண்டும்
             முழுமையாக வன்முறையை அடக்கினோமா?

        அந்நியரை விரட்டியயித் திருநாட்டில்
              அந்நியரின் முதலீடு திகமன்றோ
         வன்னியராய் அவரின்று கணினிமூலம்
              வணிகங்கள் செய்வதிலும் குறைவுமுண்டோ
         கண்ணியராய் வணிகமதை செய்தோரெல்லாம்
              கருத்தழிந்து வறுமைநிலை அடைந்ததேனோ?
         மன்னுயிரை மதியாமல் கொலைகள்செயும்
              மதியீனர் வணிகர்களாய் உழல்கின்றாரே!

         தொலைக்காட்சி வானூர்தி வாகனங்கள்
              தொலைத்தொடர்பு மின்னணுவும் சாட்டிலைட்டும்
         தொலைநோக்குப் பார்வையுடன் திகழுநாட்டில்
              தொலையாமல் இருப்பதெல்லாம் பொறாமைதானே
         கொலைகளுக்கு விலைபலவும் ுரட்சிபேசி
              வன்முறையைத் தூண்டுகின்ற செயலுமேனோ?
         அலைபாயும் மனத்துடனே மாந்தரெல்லாம்
              அன்றாடம் நடுங்குதலும் ஒழிதலேன்றோ?

         தம்மொழியைத் தாய்மொழியாய்க் கொண்டோரெல்லாம்
              தம்மொழியாய் அயல்மொழியைக் கொள்வதேனோ?
         எம்மொழியும் கற்பதிலே தவறேயில்லை
              அதனுடனே தம்மொழியும் ற்றல்தானே
         நம்மொழியை தாய்மொழியாய் மதித்தலாகும்
              நம்மொழியே அறியாமல் ஆங்கிலத்தை
         நம்மக்கள் கற்கின்ற அவலநிலையை
              நாணமுற வெறுக்கின்ற நாளும்வருமோ?!    
    
         சுதந்திரமாய் வாழுதற்கு சுதந்திரத்தை
             சுறுசுறுப்பாய் அல்லலுற்று காந்திதந்தார்
         சுதந்திரமாய் அரசியங்க இடையூறாக
             சுவீகாரத் தற்குறிகள் செயல்களாலே
         சுதந்திரமாய் அரசியக்கம் டைபடவும்
             சுகம்தேடும் ஈனர்களின் ஊழலாலே
         இதந்தருநல் ஆட்சியின்றி அல்லல்படும்
             அவலநிலை அகலும்நாள் எந்தநாளோ?!

        காந்திஜியும் பாரதியும் வாஉசியும்
             கண்டகனா பலிக்கும்நாள் எந்தநாளோ?
         ஆந்திராவும் கன்னடமும் தமிழகமும்
             அணைத்தியங்கி கைகோர்பதும் எந்தநாளோ?
         வேந்தரெனப் பரைசாற்றி நாட்டையாள
             விரும்புமனம் மாறுவதும் எந்தநாளோ?
         மாந்தரெலாம் குறையின்றி ிறைவுடனே
             மகிழ்ச்சியுடன் வாழுவதும் எந்தநாளோ

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.