புதியவை

வெலிமடை கெப்பட்டிபொலவிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையமொன்றில் கொள்ளை

வெலிமடை கெப்பட்டிபொலவிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையமொன்றில் கொள்ளை

வெலிமடை கெப்பட்டிபொல பகுதியிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையமொன்றில் அடையாளந் தெரியாதோரால் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வானொன்றில் வருகை தந்தவர்களால் இன்று அதிகாலை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
கெப்பட்டிபொல கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையத்திலேயே இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின் போது அங்கிருந்த எரிபொருள் நிரப்புனரும், காவலாளியும் உறங்கிக் கொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் குறித்த இருவரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பணம் திருடப்பட்டிருக்கும் என எரிபொருள் நிரம்பும் நிலையத்தின் முகாமையாளர் குறிப்பிட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
வெலிமடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.