புதியவை

வௌ்ளை வேன் விவகாரம்: சாட்சியமளிக்க ஆஜராகுமாறு மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் அறிவிப்பு

வௌ்ளை வேன் விவகாரம்: சாட்சியமளிக்க ஆஜராகுமாறு மேர்வின் சில்வாவிற்கு நீதிமன்றம் அறிவிப்பு

கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவிற்கு இன்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலப்பகுதியில் வௌ்ளை வேன் மூலம் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்கு தாம் தயாரென குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விடுத்திருந்த அறிவித்தலொன்றின் அடிப்படையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதவான் மேர்வின் சில்வாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆயினும், இன்று நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆஜராகுமாறு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
முகத்துவாரம் பகுதியில் மூவர் காணாமற்போன சம்பவம் தொடர்பில் அவர்களின் உறவினர்களால் செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.