புதியவை

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

இலங்கையில் அமைதியான முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பில் ஐக்கிய நாடுகளின்  செயலாளர் நாயகம் பான் கீ மூன் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ஐ.நா செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மக்களின் வாக்குரிமையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் ஆகியோரை ஐ.நா செயலாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.
நல்லாட்சி, பொறுப்புகூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளை புதிய அரசாங்கம் முன்னெடுக்கும் என பான் கீ மூன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நிலையான சமாதானத்தையும் சுபீட்ச்சத்தையும் இலங்கையில் ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி, பிரதமர், அரசாங்கம் மற்றும் இலங்கை மக்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் ஐ.நா செயலளார் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயகத்தையும் சட்டவாட்சியையும் பிரதிபளிக்கும் வகையில் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பில் அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
வொஷிங்டனில் நடைபெற்ற நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஜோன் கர்பி இலங்கையின் பொதுத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
இலங்கையில் அண்மைக்கால வரலாற்றில் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்ற தேர்தல் இதுவாகும் என அவர் கூறியுள்ளார்
பொதுத் தேர்தல் சுதந்திரமாகவும் நீதியாகவும் நடத்தப்பட்டமை தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர், சிவில் சமூகம் மற்றும் வேட்பாளர்களுக்கு அமெரிக்கா பாராட்டுக்களை தெரிவிப்பதாகவும் ஜோன் கர்பி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்
இதேவேளை, அமைதியான முறையில் தேர்தல் நடத்தப்பட்டமை தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்டமை தொடர்பாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததாக இந்தியப் பிரதமரின் செயலகம் அறிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தின்கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவு வலுபெறும் எனவும் இந்தியப் பிரதமர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.