
கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மற்றும் தெஹிவளை-கல்கிஸ்ஸ ஆகிய மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீர் பெற்றுக் கொள்ளும் களனி ஆற்றில் எண்ணெய் கலந்துள்ளதன் காரணமாக நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
களனி ஆற்றின் நீரின் தன்மை வழமைக்கு திரும்பியதன் பின்னர் நீர் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.