புதியவை

05. கவின் கலைமாமணி விருது - ஜி விஜயபத்மா


 பிரபல பெண்  எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், சமூக ஆர்வலர்  பன்முக ஆற்றல்  கொண்ட ஜி விஜய பத்மா அவர்கள்  (கவின் கலைமாமணி) விருது பெறுகின்றார்  


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு

ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை பன்முக ஆற்றல் 

கொண்டவர்களை இனம் கண்டு மாதாமாதம் (கவின் கலைமாமணி விருது)கொடுத்து கௌரவித்து 
வருகின்றார்கள் 
அதன் நான்காவது கவின் கலைமாமணி விருதினை ஜி விஜயபத்மாபெறுகின்றார் 


உலக செம் மொழிகளில் உயர தனிச் சிறப்புடையது தமிழ் மொழி

உலகில் வாழும்தமிழ் பேசும் இதயங்கள் தமிழை உயிராய் , உணர்வாய்\

 உழைப்பாய்,உழைப்பின் விளைவாய் கண்டு உணர்ந்து வாழ்பவர்கள்
உலக இலக்கியங்களுக்குள் தமிழ் இலக்கியத்திற்கு தனியொரு இடமுண்டு
அதில் பெண்களின் பங்களிப்பு மகத்தானது
அவர்களின்எழுத்துக்கள் வெறும் உணர்வுகளின் மொழிப்பதிவு மட்டும் அல்ல

செயல்களின் பரிணாம வளர்ச்சியுமாகும்
பெண்கள்

உலகின் கண்கள் .
உலக முகத்திற்குக்

கோடி கோடியாக் கண்கள்!

இன்றேல் -

உலகம் விழித்திருக்கமுடியாது !


ஒளி பிறந்திருக்கவும் முடியாது !
பெண்கள் என்னும்

இந்தக் கண்கள் இன்றேல்

பூமி கூட

ஒரு -

அக்கினிப் பிழம்பாயிருக்கும் !


ஆமாம் கடல் கடந்து வாழும் சகோதரி  ஜி விஜய பத்மாவின்  ‘நர்த்தகி’ திரைப்படம் 07 

விருதுகளை பெற்றுள்ளது

இவரது திரைத்துறை பங்களிப்பு:
 • 1. திருமந்திரம் படத்திற்கு வசனம் எழுதியுள்ளார்.
 • 2. ‘இதயம் திரையரங்கம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் 2012 இல் வெளிவந்தது.
 • 4. ஜீவீ பிலிம்ஸின் ‘ஓம் முருகா’ திரைப்படத்திற்கு வசனம் எழுதி, இயக்கியுளார்.
பத்திரிகை மற்றும் புத்தகங்கள்:
 • 1. விகடன், குமுதம், குங்குமம் மற்றும் தினமணியில் நிருபராக பணியாற்றியுள்ளார்.

 • 2. இந்தியா மூவீ நியூஸ் (சிங்கபூர்), பெண்மணி, மனுஷி, முற்றம் பெண்கள் பத்திரிகை 

 • (தமிழ்நாடு அரசு) ஆகிய பத்திரிகைகளில் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார்.

 • 3. தமிழில் 4 புத்தகங்கள் –

  • i) காற்றின் மொழி, கவிதை பெண்கள்  மற்றும் அகத்தனிமை கவிதைகள் .

  • ii) மண்குன்று பெண்.

  • iii) முல்லை பெரியாறு பிறந்த கதை.

  • iv) இதிகாச பெண்கள்.

 • 4. ஆங்கிலத்தில் – இன்சைட் இந்தியா (குழந்தைகளுக்கான பொதுஅறிவு).

 • 5. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு - மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம், தமிழ்நாடு.

தொலைக்காட்சி:  
 • 1. சன் டிவி, ராஜ் டிவி, ஜீஈசி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பட்ட பல 

 • தொடர்களை தயாரித்து இயக்கியுள்ளார்.

 • 2. பீபீசி-யின் தேர்தல் களத்தில் சிறப்பு நிருபராக பணியாற்றியுளார்.

 • 3. சென்னை தூர்தர்ஷனில், தினமும் நேரடியாக ஒளிபரப்பட அரசியல் பற்றிய சிறப்பு நிகழ்ச்சியை நான்கு வருடங்களாக தொகுத்து வழங்கினார்.

ஆவணப்படங்கள் :
 • 1. ஜேசுதாஸ் அவர்களின் இசையில், கண் தானம் பற்றிய ஆவணப்படத்தை இயக்கயுள்ளர்.

 • 2. மேலும் ‘டவுன் சிண்ட்ரோம்’, ‘குழந்தைகளுக்கு நேரும் பாலியல் கொடுமைகள்’,

 •  ‘மாற்றுத்திறன்’ ஆகியவை பற்றிய ஆவணபடங்களையும் இயக்கியுள்ளர்.

மக்கள் தொடர்பு:

 • 1. நிர்வாகச் செயலாளர் – தமிழ்நாடு மருத்துவமனைகள் (என்.ஆர்.ஐ  மருத்துவமனை, சோழிங்கநல்லூர், சென்னை. (1992-1994).

 • 2. வெளியீடு மற்றும் விளம்பரம் :

  • i) ‘மெமரி ப்ளஸ்’ - வெளியீடு மற்றும் விளம்பரம் வெளியிட்டது திரு. நரசிம்மா ராவ், அன்றைய பிரதம மந்திரி.

  • ii) ‘பார்லே பெயிலி மினரல் வாட்டர்’ – வெளியிட்டது திரு. ஜீ. கே. மூப்பனார்
  • .
  • iii) மலர் மருத்துவமனை, சென்னை – 2003 ஆம் ஆண்டு வரை.

  • iv) திரைப்படங்கள் - திருடா திருடி மற்றும் கலைப்புலி தாணுவின் புன்னகைப்பூவே.

சமூக சேவை:
 • 1. தற்போது, ‘சென்னை டர்ன்ஸ் பிங்க்’ – மார்பக புற்றுநோய் தடுப்பு இயக்கத்தின் பேச்சாளர்.

 • 2. 1000 இரத்ததான முகாம்களையும் 400 புற்றுநோய் தடுப்பு முகாம்களையும் நடத்தியுள்ளார்.

 • 3. தமிழ் திரைப்பட சண்டைக் கலைஞர்கள் சங்கத்திற்காக சிறப்பு எலும்பு முறிவு முகாமை நடத்தியுள்ளார். 

 • முதன்முறையாக அவர்களுக்கான ஆயுள் காப்பீடு திட்டத்தை கொணர ஆவன செய்தார்.

 • 4. கிராமப்புற முன்னேற்றம் மற்றும் கிராமப்புற கல்வித் திட்டங்களில் 
 • ஒருங்கிணைப்பாளராக இருந்துள்ளார்.  
இவரது ஆற்றல் முக்கையுச் சிறைக்குள் மூடுண்டு போகாமல்
,முகத்திரைக்குள் முடங்கிவிடாமல்
முகதரிசனம் தர வேண்டுமென முழுமனதாய் வேண்டுகின்றேன்.
இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 
அமைப்பாளர் 
தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்புNo comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.