புதியவை

04. கவின் கலைமாமணி விருது - எழுத்தாளர் ஷைலஜா


தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
ஒவ்வொரு மாதமும் பிரபல பெண் எழுத்தாளர்களை 
பன்முக ஆற்றல் கொண்டவர்களை
இனம் கண்டு மாதாமாதம் (கவின் கலைமாமணி விருது) கொடுத்து கௌரவித்து வருகின்றார்கள்
அதன் நான்காவது கவின் கலைமாமணி விருதினை
ஜூலை மாதம்(05-07-2015) இன்று பிரபல பெண் எழுத்தாளர் பன்முக ஆற்றல்
கொண்டவருமான ஷைலஜா (Shylaja Narayan)அவர்கள் பெறுகின்றார்

மழலைகளின் எழுத்தாளர் என புகழ் பெற்ற திருமதி ஷைலஜா அவர்களின் இயற்பெயர் மைதிலி
இந்தியாவில் ஸ்ரீரங்கத்து மண்ணில் பிறந்து வளர்ந்தார்

தற்போது இவர் கணவருடனும், தன் இரு பெண்பிள்ளைகளுடனும் பெங்களூரில் வசித்து வருகின்றார் .

மறைந்த பிரபல எழுத்தாளர் திரு ஏ.எஸ். இராகவன்அவர்களின் புதல்வி தான் ஷைலஜா அவர்கள்
எப்பொழுதும் கலகலப்பாக நகைச்சுவை உணர்வுடன் விளங்கும் இவர்

3 முறை ராஜ் டி.வி.யில் நகைச்சுவை நாடகங்களில் பங்கேற்றுள்ளார்.

கோவை, திருச்சி, பெங்களூர் வானொலி நிலயங்களில் நிகழ்ச்சி நடத்தி, தனது படைப்புகளை வாசித்திருக்கிறார்.

விளம்பரப்படம், குறும்படங்களுக்குப் பின்னணிக் குரல் கொடுக்கின்றார் . சிஃபி தமிழ் இணைய தளத்தில் குரல் பதிவுகள் அளிக்கிறார். இணையதள வானொலி ஒலி எஃப் எம்மில் அறிவிப்பாளராய் பகுதி நேரங்களில் பணிபுரிகிறார். ஓவியம், சங்கீதம், ரங்கோலி முதலியவற்றில் ஈடுபாடு கொண்டவர். இவர் ஒரு சமையல் கலைப் பிரியர். புதிய சில கண்டுபிடிப்புகளைப் பத்திரிகைகளில் எழுதி உள்ளார்.

எழுத்துத் துறையில் ஆழ்ந்த பற்றுள்ள இவர் விகடன், தினமலர், கல்கி, அமுதசுரபி, கலைமகள் ஆகியவைகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசுகளும்,

நாடகம் 2ல் நடித்து இரு முறை சிறந்த நடிகை விருதும் வாங்கி உள்ளார்.

பொதிகை தொலைக்காட்சி நடத்திய பொங்கல் சிறப்பு விமர்சனக் கவிதையில் சிறப்புப் பரிசும்,

இணையத்தில் மரத்தடி.காம், தமிழ் உலகம், முத்தமிழ், அன்புடன் குழுமங்கள் நடத்திய கதை கவிதைப் போட்டிகளில் பரிசுகளும் அடைந்துள்ளார்.

இவர் எழுதி, தினபூமி, தினச்சுடர், கலைமகள் இவைகளில் தொடர் நாவலும், ஒரு சிறுகதைத் தொகுப்பும் சிறுகதைகளும் இடம் பெற்றுள்ளன.

ஒரு மூறை திருச்சி எழுத்தாளர் சங்கம் அந்த மாதத்தின் சிறந்த சிறுகதையாக இவரது கதையினைத் தேர்ந்தெடுத்தது. இவரது 3 கதைகள் கன்னடத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

270சிறுகதைகள் .12 நாவல்கள், 2 குறுநாவல்கள் பலகட்டுரைகள்,பல கவிதைகள் .12 வானொலிநாடகங்கள் 3 தொலைக்காட்சிநாடகங்கள் என தொடர்கின்றது

இவரது சிறுகதைத் தொகுதிகள்

01- 'திரும்பத்திரும்ப’ என்னும் சிறுகதைத்தொகுப்பு -திருமகள் வெளியீடு பதிப்பகம்

02- மகரம் அவர்கள் தொகுத்த சிறந்த சிறுகதை எழுத்தாளர்களின் படைப்புகள் (வானதிபிரசுரம்) தொகுப்பு

03- கோவை லில்லி தேவசிகாமணியின் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பு

04- எழுத்தாளர் உத்தமசோழன் சிறுகதைகள் தொகுப்பு)

05- அவனும் இவனும்....திரிசக்தி பதிப்பகம் வெளியிட்ட சிறுகதைத்தொகுப்பு

இவரது நாவல்கள்

· உனக்காக ஒரு உள்ளம்(தினபூமி)

· மலர்ந்த மனம்(தினச்சுடர்)

· கண்ணோடு காண்பதெல்லாம்(கலைமகள்)

· வானைத்தொடலாம்வா!(ஆனந்தவிகடன்)

· பெங்களூர்பயங்கரம்(மாலைமதி)

· காலமெல்லாம் காத்திருப்பேன்(மாலைமதி)

· காதலை எண்ணிக்களிக்கின்றேன்(மாலைமதி)

· வாழலாம்வா!(கதைமலர்)

· காத்திருக்கிறேன் வா(குடும்பநாவல்)

· ஆசைக்கிளியே அழகியரதியே(குங்குமச்சிமிழ்)

· திக்குத்தெரியாத காட்டில்(இலக்கியபீடம்)

இவரது குறுநாவல்கள்

· நீயே காளி(ஓம்சக்தி)
· அன்பிற் சிறந்த தவமில்லை(மங்கையர்மலர்)

இவருக்கு கிடைத்த விருதுகள்.பரிசுகள்

பாரதி பிறந்த நாள்நாடகத்தில் சிறந்த நடிகையாக விருது

· அமரர்கல்கி நினைவுசிறுகதைப்போட்டியில் மூன்றாம்பரிசு

· அமுதசுரபியில் சின்னிக்ருஷ்ணன் சிறுகதைப்போட்டியில் ஆறுதல்பரிசு

· இலக்கியபீடம் சிறுகதைப்போட்டி ஆறுதல்பரிசு

· இலக்கியபீடம் அமரர்ரங்கநாயகி நினைவுநாவல்போட்டியில் முதல் பரிசு

அமெரிக்க இதழ் தென்றல் சிறுகதைப்போட்டியில் மூன்றாம்பரிசு.

· தினமலர் சிறுகதைப்போட்டி ஆறுதல்பரிசு

· கலைமகள்.... கிவாஜ சிறுகதைப்போட்டி சிறநத சிறுகதைப்பரிசு

· கலைமகள்.. ரசவாதி நினைவுச் சிறுகதைப்போட்டி முதல்பரிசு

· மஞ்சரி ...அமார் தேவன் நினைவுப்பயணக்கட்டுரை இரண்டாம் பரிசு

பெங்கலூர்தமிழ்ச்சங்கம் நடத்திய கதைகவிதைகட்டுரைபோட்டியில் முதல்பரிசுகள்

· பொதிகைதொலைகாட்சி பொங்கல்தின சிறந்தவிமர்சனக்கட்டுரைக்கு இரண்டாம் பரிசு

· இணையதளங்கள் தமிழுலகம் நடத்திய தொடர்கதைப்போட்டியில் இரண்டாம்பரிசு

· அன்புடன் குழுமத்தில் ஒலிக்கவிதைப்போட்டியில் இரண்டாம்பரிசு

· முத்தமிழ்பண்புடன் குழுமம் நடத்திய கவிதைப்போட்டியில் மூன்றாம்பரிசுகதைபோட்டியிலிரண்டாம்பரிசு


· பதிவர் நடத்திய வெண்பாகவிதைப்போட்டியில் இரண்டாம்பரிசு

வல்லமைடாட்காம் நடத்திய கண்ணதாசன் போட்டியில் இரண்டாம்பரிசுஎனத் தொடர்கின்றது

ஓவியம், வரைவதிலும் சிறந்த ஷைலஜா ஓர் பாடகியும் ஆவார்

நடிப்பு, பிண்ணனிக் குரல், ((டப்பிங் ஆர்ட்டிஸ்ட்) போன்றவற்றுடன். இணையத்தில் கல்கியின் அலைஓசை நாவல் குரல்பதிவும் செய்துள்ளார்

பத்திரிகை உலகமும், பதிவுலகமும் இவரது இருகண்களாகும்

நல்ல படைப்புகளைஎழுதி அனைவரும் பயன் பெற வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்

இவர். மண்ணில் நீண்ட காலம் வாழ்ந்து, திறமையுடன் விளங்க எல்லாம் வல்ல இறைவன் அருளை வேண்டுகிறேன்.
இதயம் பிழிந்து வாழ்த்துகிறேன்.

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

அமைப்பாளர்

தடாகம் கலை இலக்கிய கல்வி கலாச்சார சமூக அபிவிருத்தி சர்வதேச அமைப்பு
No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.