புதியவை

உலகின் அதிவேக வீரர் தாம் என்பதை மீீண்டும் உறுதி செய்த உசைன் போல்ட் (Watch Video)

உலகின் அதிவேக வீரர் தாம் என்பதை மீீண்டும் உறுதி செய்த  உசைன் போல்ட் (Watch Video)
உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் தக்கவைத்துக் கொண்டார்.
பீஜீங்கில் நடைபெற்ற உலகத் தடகளச் சாம்பியன் போட்டியில் 9.79 விநாடிகளில் 100 மீட்டரை ஓடி உசைன் போல்ட் தங்கப் பதக்கம் வென்றார்.
அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின் 9.80 விநாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஒரே நேரத்தில் ஓடிய அமெரிக்காவின் ப்ரொமேல் மற்றும் கனடாவின் டெ கிராஸ் ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
இந்த இருவரும் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளில் கடந்தனர்.
அமெரிக்கரான மைக்கேல் ரோட்ஜர்ஸ் 9.94 விநாடிகளில் ஓடி நான்காம் இடம் பெற்றார்.
மிகவும் அபூர்வமான வகையில் ஜமைக்காவின் அசாஃபா பவல், அமெரிக்காவின் டைசன் கே மற்றும் பிரான்ஸின் ஜிம்மி விகாவ் ஆகிய மூவரும் 10.00 விநாடிகளில் போட்டியை நிறைவு செய்தனர்.
ஒன்பது வீரர்கள் ஓடிய இந்த 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் கடைசி இடம் போட்டிகளை நடத்தும் நீனாவின் பிங் டியா சூவுக்கு கிடைத்தது. அவர் ஓடிய நேரம் 10.06 விநாடிகள்.
உலகின் மிகவும் வேகமான மனிதர் எனும் பட்டத்தை உசைன் போல்ட் தக்கவைத்துக் கொள்வாரா அல்லது அவரிடமிருந்து ஜஸ்டின் காட்லின் அதைக் கைப்பற்றுவாரா எனும் எதிர்பார்ப்புகளூக்கு இடையே இந்தப் போட்டி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


2B9A1C0E00000578-3207833-image-a-82_1440338049430 2B9A05DB00000578-3207833-image-a-80_1440337477340 2B9A06E400000578-3207833-image-a-70_1440336960516 2B9A070A00000578-3207833-Bolt_centre_-a-71_1440336960636 2B9A256400000578-3207833-image-a-86_1440338329182

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.