புதியவை

தேசிய அரசாங்கத்தை அமைப்பதிலுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – W.D.J.செனவிரத்ன

தேசிய அரசாங்கத்தை அமைப்பதிலுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் – W.D.J.செனவிரத்ன

தேசிய அரசாங்கத்திற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்குள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் W.D.J.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இது தொடர்பில் ஆழமாக ஆராய்ந்த பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்த இணக்கப்பாட்டிற்கு வரவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
ஆகக் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஜனாதிபதித் தேர்தலின் போதும் பொதுத் தேர்தலின் போதும் கூறியிருந்தது.
அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கலந்துரையாடியதாக ஜக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அமைச்சுப் பதவிகள் மற்றும் சலுகைகளைக் கவனத்திற்கொள்ளாமல் தாய் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இதன்போது முதலிடம் வழங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் மலிக் சமரவிக்ரம இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
புதிய அமைச்சரவை எதிர்வரும் 2 ஆம் திகதி பதவியேற்கவுள்ளதாக மலிக் சமரவிக்ரம கூறினார்.
எனினும், தேசிய அரசாங்கம் தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல் நடைபெறுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தவிசாளர் W.D.J.செனவிரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்துகொண்ட உடன்படிக்கையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் W.D.J. செனவிரத்ன தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.