புதியவை

இம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-01மு.பொ. மணிகண்டன் மறையூர்


இறக்கும் மன(ர)ங்கள்

பாறையிடுக்கில் 
ஓரிருதுளிகளை
வேட்ககைக்காய்
எடுத்துக்கொண்டு
தன்னைப் புதுப்பித்துக்
கொண்டது அம்மரம் !

நன்றியாய்
அப்பாறைக்கு
நிழல் தந்து,
கனிகளையுதிர்த்தது !

இப்பாறைக்குச் சென்றால்
கனிகளுண்ணலாமென
புள்ளினங்களும்
வரத்துவங்கின !

சிலர் நிழலுக்காய்
உட்கார்ந்தும்
பெயர்களையெழுதியும்
காதல் பாறையென்று
பெயரும் வைத்தனர் !

ஒரு நாள்
சாலையகல வாய்
விழுங்கியது மரத்தை !

இப்பொழுது
காதல் பாறை
மொட்டைப் பாறையாய்
பெயர் மாற்றப் பட்டிருக்கிறது. !

முயலொன்று
பாறையிடுக்கில்
குட்டிகளிட்டுள்ளது

உளிகளெடுத்து
வருபவனைப் பார்த்து
எனது மழலை
"மரம் மாதிரி
முயல்குட்டிகளும்
செத்துப் போயிருமாப்பா ?என்றாள்...

தோளில் சாய்த்துக்
கொண்டு நடந்தேன்
இனி இந்த ஊருக்கு
வருவதாயில்லை
சிறிது நாட்களுக்கு !

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.