புதியவை

மலேசிய கடற்பகுதியில் 100 அகதிகளுடன் வந்த படகு விபத்து

மலேசிய கடற்பகுதியில் 100 அகதிகளுடன் வந்த படகு விபத்து

மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வது அதிகரித்து வருகிறது. அகதிகள் வருகையை கட்டுப்படுத்த முடியாமல் ஐரோப்பிய நாடுகள் திணறி வருகின்றன. 


அகதிகளை சட்டவிரோதமாக மத்திய தரைக்கடல் வழியாக அனுப்பி வைக்கும் கும்பல், படகில் அதிக அளவு பயணிகளை ஏற்றி விடுவதால் படகு கவிழ்ந்து உயிரிழப்பு தொடர்கிறது. 

அந்த வகையில் இன்று சுமார் 100 பேருடன் வந்த படகு மலேசியாவின் மேற்கு கடற்கரைப் பகுதியில் வந்தபோது திடீரென கவிழந்தது. இதுகுறித்து மலேசியாவின் கடல்சார் அமலாக்க ஏஜென்சியின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் ‘‘படகு கவிழ்ந்ததில் யாராவது பலியானார்களா? என்பது குறித்து உடனடி தகவல் ஏதும் இல்லை. ஆனால், மீனவர்கள் பலரை மீட்டுள்ளனர்’’ என்றார். 

கடந்த மே மாதம் மலேசியா- தாய்லாந்து எல்லைப் பகுதியில் குவியல் குவியலாக பிணங்கள் புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆசிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டது. 

தென்கிழக்கு ஆசிய நாடுகள் புலம்பெயர்ந்து வரும் மக்களால் பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது. கடத்தல் கும்பல் மீது தாய்லாந்து அரசு மே மாதம் நடவடிக்கையை ஆரம்பித்தபிறகு, இதுவரை இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, மியான்மர், மற்றும் வங்காள தேசம் போன்ற நாடுகளுக்கு 4000-க்கும் மேற்பட்டவர்கள் கடல் வழியாக புலம்பெயர்ந்துள்ளனர். ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த பிரச்சினை இல்லாமல் இருந்தது. 

இந்நிலையில் இன்று முறைகேடாக புலம் பெயர்ந்து சென்றவர்களின் படகு கடலில் கவிழ்ந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.