புதியவை

தண்ணீர் மீது நடக்க முடியுமா? 125 மீற்றர் ஓடி சாதனை படைத்த புத்த துறவி- aloysious Coonghe

                       


சீனா நாட்டை சேர்ந்த புத்த மத துறவி ஒருவர் தண்ணீரில் மூழ்காமல் சுமார் 125 மீற்றர் தூரம் ஓடி சாதனை படைத்துள்ள சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹேனான் மாகாணத்தில் உள்ள டெங்ஃபெங் நகரில் ஷவலோன் என்ற புத்த மத கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலை சேர்ந்த ஷி லிலியாங் என்ற புத்தமத துறவி தான் இந்த அபார சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
அதேப்பகுதியில் அமைந்துள்ள ஏரி தண்ணீரின் மீது ஓடி சாதனை புரிய வேண்டும் என்பதற்காக கடந்த 10 ஆண்டுகளாக விடா முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது வரை 5 முறை தண்ணீர் மீது ஓடி சிறு சிறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளார். இவரது சாதனையை இவரே முறியடிக்கும் நோக்கத்தில் கடந்த வியாழக்கிழமை தனது அபார திறமையை உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளார்.
தண்ணீரில் மிதந்த சிறிய அளவிலான அட்டைகள் மீது ஓடிய அவர், எந்தவித இடையூறும் இல்லாமல் 125 மீற்றர் ஓடி தனது முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளார்.
புத்த மத துறவி ஓட தொடங்கியதும், காண்பவர்கள் கைத்தட்டி உற்சாகம் ஏற்படுத்த எந்த இடத்திலும் மூழ்காமல் இறுதிவரை தண்ணீர் மீது ஓடி அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியபோது, இந்த சாதனை மூலம் தனக்கு கிடைக்கும் பணத்தை கொண்டு பின்தங்கிய மற்றும் வறுமையில் வாடும் மாணவகளுக்கு உதவி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.