புதியவை

149 ஆவது தேசிய பொலிஸ் தினம் இன்று


149 ஆவது தேசிய பொலிஸ் தினம் இன்றாகும்.
சட்டமும் ஒழுங்கும் தாயகமும் உயிரும் என்பதே இம் முறை பொலிஸ் தினத்தின் தொனிப்பொருளாக அமைந்துள்ளது .
பொலிஸ் மா அதிபர் தலைமையில் பம்பலப்பிட்டி சிரேஷ்ட பொலிஸ் தலைமையகத்தில் இதற்கான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவி்த்துள்ளார்.
1966 ஆம் ஆண்டு செப்டம்பர் 3 ஆம் திகதி இலங்கை பொலிஸ் ஸ்தாபிக்கப்பட்டது.
தற்போது வரை குற்றச் செயல்களை சுமார் 60 வீதமாக குறைப்பதற்கு இலங்கை பொலிஸாரினால் இயன்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
இதே வேளை போதைப் பொருள் ஒழிப்பு வீதி ஒழுங்குகளை முன்னெடுத்தல் , பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் ஊடாக பொலிஸார் தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.