புதியவை

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்கு இன்றுடன் 14 வருடங்கள் பூர்த்தி

அமெரிக்காவை பழி வாங்கும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் திகதி அல்கொய்தா தீவிரவாதிகள் அமெரிக்காவில் அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
​பொஸ்டன் நெவர்க், நியூஜெர்சி, வொஷிங்டன் ஆகிய இடங்களில் இருந்து புறப்பட்ட விமானங்களை 19 அல்கொய்தா தீவிரவாதிகள் ஒரே நேரத்தில் கடத்தி சென்றனர்.
இதில் 2 விமானங்களை நியூயோர்க்கில் உள்ள உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் மீது மோத விட்டனர். ஒரு விமானம் விர்ஜினியாவில் உள்ள அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் கட்டிடத்தில் மோத விட்டனர். மற்றொரு விமானத்தை அமெரிக்க ஜனாதிபதி மாளிகையான வெள்ளை மாளிகை மீது மோதுவதற்காக கொண்டு சென்றனர்.
ஆனால் பயணிகள் தீவிரவாதிகளை மடக்கி பிடிக்க முயன்றதால் விமானத்தை தரையில் மோதி வெடிக்க செய்தனர்.
விமானங்கள் மோதிய இரட்டை கோபுரம் முழுவதும் தீப்பற்றி சற்று நேரத்தில் இடிந்து விழுந்தது. இதில் 2606 பேர் உயிர் இழந்தனர்.
பென்டகனில் நடந்த தாக்குதலில் 119 பேர் உயிர் இழந்தனர். அனைத்து தாக்குதலிலும் சேர்த்து 2996 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 19 தீவிரவாதிகளும் மற்றும் விமான பயணிகளும் அடங்குவர்.
அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்திய இந்த தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலுக்கு திட்டமிட்டு கொடுத்த அல்கொய்தா தலைவன் பின்லேடனை பிடிப்பதற்காக அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தது கடைசியில் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த பின்லேடன் கொல்லப்பட்டான்.
அமெரிக்கா மீது தாக்குதல் நடந்து 11 ஆண்டுகள் ஆகிறது. இன்று இதன் நினைவு தினமாகும். அன்று நடந்த சோகம் இன்றுவரை அமெரிக்காவுக்கு தீராத வலியை கொடுத்து வருகிறது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.