புதியவை

களனி கங்கையை சூழவுள்ள 150 தொழிற்சாலைகள் தொடர்பில் ஆராய தீர்மானம்

களனி கங்கையை சூழவுள்ள 150 தொழிற்சாலைகள் தொடர்பில் ஆராய தீர்மானம்

அம்பதலே நீர் சுத்திகரிப்பு மத்திய நிலையத்தை அண்மித்த களனி கங்கையை சூழவுள்ள 150 தொழிற்சாலைகள் தொடர்பில் ஆராய்வதற்கு தேசிய நீர்வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது.
குறித்த தொழிற்சாலைகளின் கழிவுகள் களனி கங்கையில் கலக்கப்படுகின்றதா என ஆராயப்படவுள்ளதாகவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையுடன் இணைந்து இந்த திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் அம்பதலே நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து 10 கிலோமீற்றர் தூரத்திற்குள் களனி கங்கையின் இருமருங்கிலும் அமைந்துள்ள அனைத்து இடங்களிலும் ஆய்வு நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் எவரேனும் ஒரு நபரோ அல்லது நிறுவனமோ களனி கங்கையில் கழிவுகளை கலப்பது கண்டறியப்படுமாயின் அவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நீர்வழங்கள் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் ரஞ்சித் பாலசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.