புதியவை

அஸ்தமித்த ஆலமரத்திற்கு வயது 15 (தலைவர் அஸ்ரப் நினைவு தினக்கவிதை) - கலைமகன் ஹுதா உமர் மாளிகைக்காடு


செப்டம்பர் 16-இது 
சமாதானம் செத்துப்போன-நாள்
முஸ்லிம்களின் முகவரி -தொலைந்த நாள்
முள்ளந்தண்டும்,
மூளையும்,
முன்னானும் 
இல்லாத முசிபத்துகள்-எல்லாம்
தலைவனாக உருவான நாள் !!!

ஒரு காங்கிரசை உருவாக்கி
பல லட்சம் போராளிகளை
பதுக்கிவைத்த சாணக்கியம்
சிதறிப்போன- நாள்

ஆயுதத்தால் துளைக்க முடியா
பல தடைச்சுவர்களை
வாயால் தகத்தேரிந்த கல்விமான்
மறைந்த நாள் !!

நானனும் நீயும்
நீயனும் நானும்- நாமான
நாமம் மறைந்த நாள் !!

நல்ல எதிரிகளையும்
நாவார பாராட்ட தெரிந்த
பாராளுமன்ற ஒலி
ஓய்ந்த-ஒரு நாள் 
சம்மாந்துரையூர்- தந்த
சரித்திர மகனே
நீ-பிறந்த மண்ணில் பிறந்ததற்காய்
பெருமைப்படுகிறேன்.......!!

அமைச்சராய் நானும்
ஒருநாள் வரலாம்
நீ- செய்த சேவையில்
துளி செய்தாலும்
கின்னஸில் என்பெயரும்
நிச்சயம் வரும்......!!

நீ-நின்று பேசினால்
இனவாதம் தலை கவிழ்க்கும்,
பிரதேச வாதம் ஓட்டம் பிடிக்கும்

பின்னால புறம்பேசினாலும்
உன்-முன்னால
சகலரும் சாந்தமே....!!

தலைவா !!
உனக்கு கொபியனானும்- நண்பன்தான்
கோப்பி கடை கனானும்- நண்பன்தான்

துறைமுகம் முதல்
பல்கலை வரை- உன் பெயர் சொல்லும்
அது உன்னால் மட்டுமே -முடியும்.

ஒன்றரை தசாப்தம்
கடந்துவிட்டது
நீ - தந்த காங்கிரசும் கரைந்து விட்டது.......!!

உன் விரலுக்கு தெரிந்த
மொழி கூட -எம் 
புதுத்தலைவர்களுக்கு தெரியவில்லை

கட்டுநாயக்க மலைமொகடு
கண்ணிர் சிந்துகிறது
உன் குதிரத்தின்
வாசம் முகர்ந்ததால்

மில்லியன் கணக்கான வழக்குகளில்
உன் வழக்கும் ஓன்று
மரணமா? இல்லை கொலையா என.....!!

தேர்தல் காலத்தில்- நீ
தவறாமல் வருகிறாய்
என்வீட்டு சுவத்திலும்
சிரிக்கிறாய்...!!

ஆடும்,மாடும் உன்னை தின்கிறது
அப்போதும்- நீ சிரிக்கிறாய்

சிங்கம் -உன் கர்ச்சனை
இல்லாத பாராளுமன்றம்
காமடி அரங்கமாகி -கிடக்கிறது

குள்ள நரிகளெல்லாம்
கும்மாளம் போடுகிறது
உன் கதிரைக்கு
சொந்தம் கொண்டாட......!!

குருதியை பசளையாக்கி
கண்ணீரை தண்ணீராக்கி
நீரும் சமூகமும்
வளர்த்த இயக்கம்
இன்று யானைக்கடையில்
அடமானம்.......?

அடமானம் மீட்க
நீ - வராதே
அரசியல் சாக்கடையில்
குப்பைகள் கூடி விட்டது......!!

இறைவன் ஜன்னத்தில்
பிர்தௌஸ் உனக்கு தந்திட
நான் பிராத்திக்கிறேன்.......!!

அடமானம் மீட்க
நீ - வராதே
அரசியல் சாக்கடையில் 
குப்பைகள் கூடி விட்டது......!!

அல்லாஹ்
பாவங்களை மன்னித்து
கருணைக்கதவை-திறந்து கொடு 
அவர் இங்கு கஷ்டப்பட்டுவிட்டார்
கருணைப்பார்வையை
அவர் மீது திருப்பிவிடு ........!!

ஆமீன்...! ஆமீன்......!!

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.