புதியவை

இலங்கையில் கைதான 16 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கையில் கைதான 16 இந்திய மீனவர்கள் விடுதலை

இலங்கையில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.
நீதிமன்ற தீர்ப்புகளின் பிரகாரம் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது .
இதன் அடிப்படையில் ஊர்காவற்துறை நிதிமன்றத்தில் இவர்களில் 7 பேர் ஆஜர்படுத்தப்பட்டதுடன் 9 பேர் பருத்துத்துறை நீதிவான் நீதிமன்றத்தில் நேற்று (14) ஆஜர் படுத்தப்பட்டனர் .
விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இந்திய தூதரக்ததிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது .
சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 16 பேர் கடந்த முதலாம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர் .
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான நற்புறவை மேம்படுத்தும் வகையில் அரசாங்கம், மீனவர்களை விடுவிப்பதற்கு தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.