புதியவை

20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இதுவே சிறந்த தருணம்

20ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற இதுவே சிறந்த தருணம்


தேர்தல் முறையை மாற்றியமைக்கும் 20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்பட தாம் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். 


நடந்து முடிந்த தேர்தலில் கட்சிகள் பலமடங்கு பணம் செலவு செய்ததாகவும் அதன்மூலம் ஊடகங்கள் போசிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

விருப்பு வாக்கு முறையை ஒழித்து புதிய முறையில் தேர்தல் நடத்தியிருந்தால் இன்று தோல்வியை சந்தித்துள்ள சில கட்சிகள் மேலும் சில ஆசனங்களை வெற்றிகொள்ள வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டார். 

பிரதான கட்சிகள் இரண்டை விடுத்து ஏனைய கட்சிகள் சில பணம் செலவளித்த விதத்தை பார்க்கும்போது புதுமையாக இருந்ததென நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். 

நாட்டுக்கு புதிய அரசியல் யாப்பும் அவசியம் என பாராளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.