புதியவை

முன்னாள் போராளிகள் 20 பேர் சமூகமயப்படுத்தப்பட்டனர்


புனர்வாழ்வளிக்கப்பட்ட 20 முன்னாள் போராளிகள் இன்று சமூகமயப்படுத்தப்பட்டனர்.
முன்னாள் போராளிகளை சமூகமயப்படுத்தும் நிகழ்வு  புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் ஏற்பாட்டில் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது.
இவர்களில் 11 பேர் கிராம சேவகர் பரீட்சையில் தோற்றி சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்காகும்.
இதேவேளை, இதற்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட 30 பேருக்கு நீர் இறைக்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டன.
அத்துடன், புனர்வாழ்வு காப்பகத்தில் கணனிப் பயிற்சியை நிறைவு செய்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.