புதியவை

கிழக்கு பல்கலையில் காணாமல் பேனவர்களின் 25வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு


கிழக்கு பல்கலைக்கழக வளாக நலன்புரி முகாமிலிருந்து கடந்த 05.9.1990 அன்று காணாமல் போன 158 தமிழ் மக்களினதும் 25வது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று காலை பல்கலைகழகத்திற்கு முன்னால் இடம்பெற்றது. 


மேற்படி உறவுகளை இராணுவத்தினரே கடத்திச்சென்றதாக குற்றம் சுமத்தும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் அவர்களை கண்டு பிடித்து தருமாறும் கோரிக்கை விடுத்தனர். 

நாங்கள் நினைவு கூறுவோம் எனும் தலைப்பில் எளிமையான முறையில் நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது. 

தாம் வேண்டுவெதெல்லாம் புதை குழி அல்ல புன்னகை மனிதர்களையே என்ற தலைப்பிலான துண்டுப் பிரசுரங்களும் இதன்போது விநியோககிக்கப்பட்டன. 

அத்துடன் காணால் போனவர்களின் நினைவாக விளக்குகளும் ஏற்றப்பட்டன. 

இதன்போது பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.