புதியவை

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் மேலும் 26 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் மேலும் 26 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளன

ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம் தொடர்பில் இடம்பெறுகின்ற விசாரணைகளின் பொருட்டு மேலும் 26 பேரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்ய வேண்டியுள்ளதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிடுகின்றார்.
இந்த விவகாரம் தொடர்பில் இதுவரை நால்வரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் செயலாளர் கூறியுள்ளார்.
இதன்போது ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த இராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவர் தாம் உண்மைக்குப் புறம்பான வாக்குமூலம் வழங்கியுள்ளதை ஏற்றுக்கொண்டதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவிக்கின்றார்.
குறிப்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் முன்னிலையில் தம்மால் உண்மையை கூறமுடியாமல் போனதாகவும் அந்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டிருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிடுகின்றார்.
இந்த விடயம் குறித்து ஆணைக்குழுவினால் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, ஆரம்பக்கட்ட விசாரணை மற்றும் குறுக்குக் கேள்விகளை கேட்கும் நடவடிக்கைகள் நேற்றும், நேற்று முன்தினமும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் சுமார் 500 ஊழியர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்ட ஆணைக்குழுவின் செயலாளர், அதற்குப் பதிலாக சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 150 இற்கும் அதிகமான ஊழியர்கள் கடமைக்கு அமர்த்தப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
இதன்போது சிவில் பாதுகாப்பு திணைக்கள ஊழியர்கள் தமக்குரிய சீருடைக்குப் பதிலாக வேறொரு வகையான உடையுடன் கடமையில் அமர்த்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பிலே​யே விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பாரிய மோசடிகள் மற்றும் ஊழல் விசாரணை ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் மேலும் கூறினார்.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.