புதியவை

பிரதமர் ரணில் விக்ரமசிங்க,மோடிக்கு இடையிலான சந்திப்பின் போது 4 உடன்படிக்கைகள் கைச்சாத்து

பிரதமர் ரணில் விக்ரமசிங்க,மோடிக்கு இடையிலான சந்திப்பின் போது 4 உடன்படிக்கைகள் கைச்சாத்துஇந்தியாவுக்கு உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அந்நாட்டுப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பு இந்திய தலைநகர் புதுடில்லியில் இன்று முற்பகல் நடைபெற்றதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் ஷமீர் ரசூல் டீன் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் இந்த சந்திப்பு தொடர்பிலான செய்திகளை சேகரிப்பதற்கான சந்தர்ப்பம் ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.
இந்திய பிரதமருடனான சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியொரும் இணைந்திருந்தனர்
இந்த சந்திப்பின்போது நான்கு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
சார்க் வலய நாடுகளுக்கு இடையிலான செய்மதிப் பரிமாற்றத் திட்டம், வவுனியா மாவட்ட வைத்தியசாலையின் புனரமைப்புத் திட்டம், சிறு அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதி உதவி மற்றும் இந்தியாவின் 17 மாநிலங்களில் உள்ள அவசர சிகிச்சை சேவைகளை இலங்கைக்கு பெற்றுக்கொள்வது ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த 4 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நாளை (16) நடைபெறவுள்ளது.
மேலும் நாளை (16) பிற்பகல் 12.45 இற்கு பிரதமர் இலங்கைக்கு புறப்படவுள்ளதாக புதுடில்லிக்கு சென்றுள்ள எமது அலுவலக செய்தியாளர் ஷமீர் ரசூல் டீன் குறிப்பிட்டார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.