புதியவை

மகனைக் கொன்ற தந்தை தற்கொலை: தாய், 4 மாத குழந்தை காயம்

மகனைக் கொன்ற தந்தை தற்கொலை: தாய், 4 மாத குழந்தை காயம்


மட்டக்களப்பு - வவுணதீவு - பருத்திச்சேனையில் இன்று நண்பகல் தந்தை ஒருவர் மகனை கத்தியால் குத்தி கொலை செய்து தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


சம்பவத்தை கண்டு பயந்து மனைவி தனது 4 மாத குழந்தையுடன் கிணற்றில் பாய்ந்ததில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.நஸீர் தெரிவித்தார். 

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 

தாமோதரம் வினோத் என்ற 8 வயதான வாய்பேச முடியாத தனது மகனை தந்தை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் தாமோதரம் மகேந்திரன் ஆகிய 30 வயது தந்தை தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 

சம்பவத்தை கண்டு பயந்த மகேந்திரன் குணலக்ஷ்மி என்ற தாய் தனது 4 மாத குழந்தையான மகேந்திரன் தனுவுடன் கிணற்றில் பாய்ந்தபோது காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.