புதியவை

தமிழக மீனவர்கள் தொடர்ந்து 5வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில்

தமிழக மீனவர்கள் தொடர்ந்து 5வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில்


இலங்கை கடற்பரப்பில் அத்துமிறி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் கோரி ராமேசுவரம் மீனவர்கள் கடந்த 5ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 


தொடர்ந்து 5–வது நாளாக இன்றும் அவர்களின் வேலை நிறுத்தம் நீடித்துள்ளது. 

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க வேண்டும், 16 தமிழக மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும், இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டு சேதமடைந்த தமிழக விசைப்படகுகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர். 

இந்த வேலை நிறுத்தத்தில் 2500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஈடுபட்டுள்ளதுடன் இதனால் 500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. 

எனினும் சிறிய விசைப்படகுகள் வைத்திருப்போர் வழக்கம்போல் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.