புதியவை

64 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாறு

64 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாறு

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64 ஆவது மாநாடு பொலன்னறுவையில் இன்று நடைபெற்றது.
1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் திகதி S.W.R.D. பண்டாரநாயக்கவின்
தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஸ்தாபிக்கப்பட்டது.
ஒரு வருட குறுகிய காலத்திற்குள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை எதிர்க்கட்சிகளில் பிரதான கட்சியாக பண்டாரநாயக்க வளர்ச்சியடையச் செய்தார்.
1956 ஆம் ஆண்டில் மேலும் சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி,  ஐக்கிய மக்கள் முன்னணியாக வெற்றிப் பாதையில் சென்று அந்த கட்சியின் ஸ்தாபகத் தலைவரான S.W.R.D. பண்டாரநாயக்க பிரதமராகும் வரை அந்தப் பயணம் தொடர்ந்தது.
எதிர்பாராத சந்தர்ப்பத்தில் S.W.R.D. பண்டாரநாயக்க படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் கட்சியின் எதிர்காலம் பாரிய சவாலாகியது.
எனினும், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் பாதிப்பிற்குள்ளாகாது அதன் பொறுப்பை சிறிமாவோ பண்டாரநாயக்க ஏற்றார்.
அவரின் தலைமையில் முன்னோக்கிச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உலகின் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கிய பெருமையைப் பெற்றுக் கொண்டது.
1960 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இரண்டு தேர்தல்களிலும் 1965, 70 மற்றும் 77 ஆம் ஆண்டுகளிலும் ஆளும் கட்சியாகவும் எதிர்க்கட்சிகளின் பிரதான கட்சியாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பட்டது.
1977 ஆம் ஆண்டில் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 1994 ஆம் ஆண்டில் புதுப்பொலிவு பெற்றது. பண்டாரநாயக்க குடும்பத்தின் புதல்வியான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்சியினதும் நாட்டினதும் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவின் வெற்றியின் பின்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய பாதையில் பயணத்தைத் தொடர்ந்தது.
30 ஆண்டுகால யுத்தத்திற்கு முடிவு கட்டிய மஹிந்த ராஜபக்ஸ ஆட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கெளரவத்தைப் பெற்றுக்கொடுத்தது.
2015 ஆம் ஆண்டில் பொதுமக்களின் ஆதரவிற்குப் பாத்திரமான மைத்திரிபால சிறிசேன, கட்சியின் தலைமைத்துவத்தைப் பெற்றுக்கொண்டமையானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வரலாற்றில் மற்றுமொரு சந்திஷ்டானமாகும்.
13 ஆண்டுகளாக தொடர்ந்து பொதுச்செயலாளராக செயற்பட்டவர் கட்சியின் தலைமைத்துவத்திற்குத் தெரிவானமை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றில் மற்றுமொரு முக்கியமான விடயமாகும்.
கட்சி ஸ்தாபிக்கப்பட்ட மறுநாள் பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன இன்று கட்சியின் தலைமைத்துவத்தை ஏற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வழிநடத்துகின்றார்.
நல்லாட்சிக்குள் சுபீட்சமான நாடாக இலங்கையை உருவாக்கும் கொள்கையுடனேயே இன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்படுகின்றது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.