புதியவை

இலங்கை அகதிகள் முகாமில் இளம் மனைவி தீக்குளித்து தற்கொலை -aloysious Coonghe


தமிழகத்தின் - திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில், இளம் மனைவி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி, கொட்டப்பட்டு இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி (24), இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது. 

தற்போது, மூன்று வயதில் குழந்தை உள்ளது. இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த ரூசாமிலி, வீட்டில் தனியாக இருந்தபோது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். 

வீட்டுக்குள் இருந்து தீ வருவதை பார்த்த அப்பகுதியினர், உள்ளே சென்று ரூசாமிலியை காப்பாற்ற முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் ரூசாமிலி, தீயில் கருகி பரிதாபமாக இறந்தார், என தமிழக ஊடகமான தினமலர் குறிப்பிட்டுள்ளது. மேலும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.