புதியவை

அடிப்படை வசதிகளை அனைவருக்கும் சமமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு

அடிப்படை வசதிகளை அனைவருக்கும் சமமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவிப்பு



நாடளாவிய ரீதியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி அதன் பயனை அனைத்து மக்களுக்கும் சமமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொலன்னறுவையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளை முன்னிட்டு பொலன்னறுவை – மிரிஸ்ஹேன மற்றும் மெனிக் ​ஹொரொவ்வ பிரதேசங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது 400 குடும்பங்களுக்கு உலர் உணவுகளை வழங்கிய ஜனாதிபதி, அவர்களுடன் கலந்துரையாடினார்.
இதேவேளை, சிறுநீரக நேயாளர்களுக்காக நீர் வடிகட்டிகளைப் பகிர்ந்தளிக்கும் நிகழ்வு மெதிரிகிரிய தலாகொலவெவ ஶ்ரீ சுதர்ஷனாராம விஹாரையில் நடைபெற்றது.
உலகின் எந்தவொரு நாடும் தற்போதைய அரசாங்கத்துடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்பதால், எதிர்கால அபிவிருத்திப் பணிகளுக்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்குவார்கள் என ஜனாதிபதி இதன்போது கூறினார்.
ஜனாதிபதியின் பிறந்த நாளை முன்னிட்டு மேலும் சில நிகழ்வுகள் பொலன்னறுவையில் இடம்பெற்றன.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.