புதியவை

எங்கோ கால்கள் போகிறது-மீ.விசுவநாதன்

  


எங்கோ கால்கள் போகிறது - நன்மை
ஏதோ செய்ய நடக்கிறது !
எங்கும் யாரும் ஒன்றாக - அன்பில்
இசைந்து மகிழக் கடக்கிறது !     (எங்கோ கால்கள்)

ரயிலில் பயணம் செய்கின்றேன் - மனித
ரசனை அறிய முயல்கின்றேன் !
வெயிலில் களைத்து நிற்கின்றேன் - ஒரு
வேம்பு நிழலைக் கற்கின்றேன் !  (எங்கோ கால்கள்)

பிச்சை எடுப்போன் வீதியிலே - கைப்
பிள்ளைப் பசியை விற்கின்றான் !
கொச்சை மொழியில் அவனையுமே - பணக்
கொழுப்பில் பேசுவோ(ன்) இருக்கின்றான்  ! (எங்கோ கால்கள்)

ஏட்டுக் கல்வி இளைஞரென – பள்ளி
ஏலம் விடுவதில் வருந்துகிறேன் ! 
நாட்டுச் செல்வம் அவர்களென - அவர்
நன்றாய் அறிந்தால் திருந்துகிறேன் !  (எங்கோ கால்கள்)

காவிரி, பொருநை நதிகளெலாம் - மனிதக்
கழிவால் அழிவதி(ல்) அழுகின்றேன் !
ஊர்வரி போடு(ம்) அரசாங்கம் - ஊழல்
ஊற்றாய்ப் போனதில் கொதிக்கின்றேன்! (எங்கோ கால்கள்)

கடவுள், மதத்தின் பெயராலே - மக்கள்
கவலை கொள்வதில் துடிக்கின்றேன் !
திடமாய் தேசம் முன்னேற - வரும்
தெளிந்த தலைவனை மதிக்கின்றேன் ! (எங்கோ கால்கள்)

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.