புதியவை

பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்

இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு கருத்தரங்கு இன்றும் நாளையும் கொழும்பில் இடம்பெறவுள்ளது. 


2011ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கருத்தரங்கு இந்தமுறை 5 வது தடவையாக இடம்பெறுகின்றது. 

"உலக சவால்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு" என்ற தொனிப்பொருளில் இந்தக் கருத்தரங்கு இடம்பெறும் அதேவேளை விஷேட பிரதிநிதியாக ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீட் கர்ஸாய் கலந்து கொள்கின்றார். 

இந்தக் கருத்தரங்கில் 34 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருப்பதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். 

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.