புதியவை

அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான முன்மொழிவு இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான முன்மொழிவு இன்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பு

அமைச்சரவையை விஸ்தரிப்பது தொடர்பான முன்மொழிவு இன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது .
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று விவாதம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் ஆளும் கட்சி பிரதம கொறடா கயன்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.
இதன் பின்னர் அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பில் வாக்கெடுப்பு முன்னெடுக்கப்பட்டு அதனை நிறைவேற்றி கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக 19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தின் பிரகாரம் 30 பேர் உள்ளடங்கியதாக அமைச்சரவை காணப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இரு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து தேசியஅரசாங்கத்தை ஸ்தாபித்துள்ளதனால் அமைச்சரவையை விஸ்தரிக்கும் தேவை ஏற்பட்டுள்ளதாகவும் கயந்த கருணாதிலக்க தெரிவி்த்துள்ளார்.
இதே வேளை நாளை தினம் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை நியமனங்கள் இடம்பெறவுள்ளதாகவும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.