புதியவை

துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய கைதடி பாடசாலை அதிபரின் பிணை மனு நிராகரிப்பு

துஸ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய கைதடி பாடசாலை அதிபரின் பிணை மனு நிராகரிப்பு

யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள விசேட தேவையுடையோருக்கான பாடசாலை மாணவர்களை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சந்தேகநபரின் பிணை கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் சந்தேகநபரை நேற்று ஆஜர்படுத்தியதை அடுத்தே பிணை மறுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணைகள் நிறைவடையும்வரை விசேட தேவையுடையோர் பாடசாலையின் முன்னாள் அதிபரான சந்தேகநபரை எதிர்வரும் 14 நாட்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் பலரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.
குறித்த சாட்சிகளில் பலர் 18 வயதுக்கு குறைந்தவர்கள் என்பதாலும், அவர்களுக்கு பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையாலும் விசாரணைகளை நிறைவுசெய்ய முடியாதுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
மேலும் பாதிக்கப்பட்ட மாணவர்களின் வாக்குமூலங்களை உரிய முறையில் பதிவுசெய்வதற்கான மொழி பரிவர்தனையாளரின் வேலைப்பழு காரணமாக உரிய வாக்குமூலங்களை பெற்றுக்கொள்வதில் தாமதம் நிலவுவதாகவும் பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் எதிர்வரும் மூன்றாம் திகதி மேலும் மூவரிடம் சாட்சியங்கள் பதிவுசெய்யப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே சந்தேகநபரை விடுவிக்கும் பட்சத்தில் அவர் சாட்சியங்களை கலைக்கக்கூடும் என பாதிக்கப்பட்டோர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் பாடசாலை நிர்வாகம் தமது கட்சிக்காரருக்கு எதிராக பொய்யான வழக்கை தொடுத்துள்ளதாக சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த பின்னர் சந்தேகநபரின் பிணை மனுவை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.