புதியவை

புதிய அரசியல் யுகத்தை ஏற்படுத்தும் தேசிய அரசாங்கத்தை எதிர்ப்பது ஏன்?

புதிய அரசியல் யுகத்தை ஏற்படுத்தும் தேசிய அரசாங்கத்தை எதிர்ப்பது ஏன்?


இலங்கையில் புதிய அரசியல் யுகம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படும் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவது ஏன் என புரியவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 


தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு தொடர்பான பிரேரணை மீது உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். 

தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அதிகரிப்பு யோசனையை விவாதிக்க அனுமதி அளித்து சபாநாயகர் விடுத்த தீர்ப்பை வரவேற்பதாக அவர் கூறினார்.

பாராளுன்றில் அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சரவை பெறும் கட்சிகளும் அமைச்சரவையில் இருக்காத கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் அழைப்பு விடுத்தார். 

அமைச்சரவையில் அல்லாது பாராளுமன்றில் இருந்து அங்கு அமைக்கப்படும் தெரிவுக்குழுக்களில் பங்கேற்று தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கத்துடன் சேர முடியாவர்கள் பழைய யுகம் போன்று கோஷங்களுடன் இருக்க முடியும். வரலாற்றை பற்றி கதைப்பதானால் கதைத்துக் கொண்டே இருக்கலாம் ஆனால் எதிர்கால பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்ககூடிய நிலைக்குச் செல்ல வேண்டும் என பிரதமர் தெரிவித்தார். 

நாம் முன்னோக்கிச் செல்வதா அல்லது ஒரு இடத்தில் தேங்கி நிற்பதா என்று சிந்திக்க வேண்டும். 

நாட்டுக்கு வெஸ்ட் மினிஸ்டர் முறை உகந்தது இல்லை என்றால் புதிய முறை பற்றி சிந்திக்க வேண்டும். எதிர்கட்சித் தலைவர் தெரிவில் ஐமசுமு செய்த அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. 

பாராளுமன்றில் மாவட்ட அபிவிருத்தி இணைக்குழு சபை, வரவு - செலவு அலுவலகம் அமைக்க முடிவு செய்துள்ளோம். கேள்விகளுக்கு அமைச்சர்களே பதில் சொல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். எனவே சமரச அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.