புதியவை

தூய ஆட்சி கேளுங்கோ- மீ.விசுவநாதன்

வெள்ளை வேட்டி
வெள்ளச் சட்டை பாருங்கோ - இன்று

கொள்ளக் காரன்
கொண்ட வேடம் தானுங்கோ !

கோடி கோடி
கொண்டு போறான் பாருங்கோ - அவன்
ஓடி வந்து
ஓட்டுக் கேப்பான் போடுங்கோ !

குடும்ப மாகக்
கூறு போட வாராங்கோ - அந்தக்
கொடுங் கோலன்
குணத்தைக் கொஞ்சம் பாருங்கோ !

தானே தமிழின்
தானைத் தலைவன் என்பாங்கோ – நீங்க
தானே எனக்கு
தாயும் தகப்பன் என்பாங்கோ !
  
கள்ளப் பணத்தை
கணக்குப் பார்த்து வைப்பாங்கோ - தங்கள்
பிள்ளை பேரில்
பித்த லாட்டம் செய்வாங்கோ !

துட்டு வாங்கி
ஓட்டுப் போட வேணாங்கோ - மனம்
தொட்டு நல்ல
தூய ஆட்சி கேளுங்கோ !

உள்ள தெல்லாம்
உரைச்சுப் புட்டேன் கேளுங்கோ - இந்தக்
கள்ள ஒட்டுக்
காரன் கூட்டம் ஓட்டுங்கோ  !

No comments :

Post a comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.