புதியவை

இம் முறை (ஆகஸ்ட் மாதம்) நடைபெற்ற கவிதைப் போட்டியில் கவிதை நூலுக்காக தெரிவு செய்யப்பட்ட கவிதை-பகவதி ஜெர்மனிஎன் அம்மா

அருந்தவமிருந்து பூமிக்கு
அழைத்தவள் நீ
ஆறாத துயரிலும் அன்பாய் எனை வளர்த்தவள் நீ
இரவு பகல் பாராது உன்னை ஊனாய் கரைத்தவள் நீ
ஈரைந்து மாதங்கள் என் உயிர் சுமந்தவள் நீ

உன் பசி மறந்து
என் பசி தீர்த்தவள் நீ
ஊனாய் உனை உருக்கி
உன் சுகங்கள் மறந்தவள் நீ
என் ஆசைகளறிந்து உன் தேவைகள் தொலைத்தவள் நீ
ஏணியாய் எனை உயர்த்தி உன் வாழ்வை அழித்தவள் நீ

ஐம்புலனும் உனை வருத்தி அரும்பாடு பட்டவள் நீ
ஒரு முறையேனும் எனை விட்டு பிரிந்ததில்லை நீ
ஓராயிரம் உன் தேவைகளை உன் காலடியில் புதைத்தவள் நீ
மெலுகாய் உருகி எனக் ஒளி கொடுத்தவள் நீ

மீண்டும் உனைப்போல எனக்கொரு தாய் வாய்ப்பதில்லை
உனக்காக இந்த பாவி மகள் எதுவுமே செய்ததில்லை
என் மனசு ஏங்குதம்மா
அநுதினமும் உன்னை எண்ணி
அழைக்கிறேன் வந்திடம்மா என் முகம் காண்பதற்கு

உன் மடியில் நானும் தலை சாய்க்க வேண்டுமம்மா
யாவையும் உன்னிடம் கூறி
அழுது மகிழ வேண்டுமம்மா
தேரோட்டம் போல வாழ்வை சீராக்கி வைத்தாயம்மா
சிந்தை குளிர என் வாழ்வை காண தவம் இருந்தாயம்மா

உன் ஆசைகள் யாவுமே கற்பனைகள் ஆனதம்மா
கனவிலும் நினையாத கதையாகிப் போனதம்மா
உன் மகளோ உன் கண்முன் தொலைதுாரம்
காணாமல் தொலைந்தே போனேன் அம்மா

மகிழ்வுடனே அனுப்பி வைத்தாய்
மறக்கவில்லை உன் மகளம்மா
மன்றாடிக் கேட்கின்றேன்
மன்னித்து விடு என்அம்மா

0

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.