புதியவை

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இன்று மோதல்

முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: அவுஸ்திரேலியா – இங்கிலாந்து இன்று மோதல்

அவுஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று இடம்பெறுகின்றது.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரை 2 – 3 என்ற ரீதியில் இழந்தது. அதைத் தொடர்ந்து இடம்பெற்ற 20 ஓவர் போட்டியிலும் அவுஸ்திரேலியா தோல்வி கண்டது.
அடுத்ததாக அவுஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி முதலாவது ஒரு நாள் போட்டி சவுதம்டனில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.
மைக்கல் கிளார்க் ஓய்வுபெற்ற நிலையில், 26 வயதான ஸ்டீவன் ஸ்மித் தலைமையில் அவுஸ்திரேலியா விளையாடும் முதல் தொடர் இதுவாகும். இதன் மூலம் அவுஸ்திரேலியா புதிய அத்தியாயத்தை நோக்கி பயணிக்கிறது என்றே சொல்லலாம்.
அவுஸ்திரேலிய அணியில் ஜோர்ஜ் பெய்லி, மக்ஸ்வெல், ஷேன் வட்சன், டேவிட் வோர்னர், மிச்செல் ஸ்டார்க், மிச்செல் மார்ஷ் என்று நட்சத்திர வீரர்களுக்கு பஞ்சமில்லை.
காயம் மற்றும் ஒரு சில வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஓய்வு காரணமாக அஸ்டன் ஏகர், ஜோ பர்ன்ஸ், மார்கஸ் ஸ்டோனிஸ் போன்ற புதுமுக வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர். பிராட் ஹடின் ஓய்வு பெற்று விட்டதால் மேத்யூ வேட் விக்கெட் காப்பாளராக செயற்படுவார்.
இவ்விரு அணிகள் இதுவரை 131 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் அவுஸ்திரேலியா 77 போட்டிகளிலும், இங்கிலாந்து 49 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு ஆட்டம் சமனிலையில் முடிந்தது. 3 ஆட்டங்களில் முடிவு எட்டப்படவில்லை. இவ்விரு அணிகளுக்கிடையே நடந்த கடைசி 10 ஒரு நாள் போட்டிகளில் அவுஸ்திரேலியா 9 இல் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.