
இன்று அதிகாலை நாட்டில் திடீர் மின்சார தடை ஏற்பட்டது.
பிரதான மின்சார கட்டமைப்புக்குள் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக நாடலாவிய ரீதியில் மின்தடை ஏற்படுவதற்கு காரணம் என மின்சார சபையின் தலைவர் அநுர விஜேயபால தெரிவிக்கின்றார்.
இதற்கான காரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நள்ளிரவு 12 மணி ஆகி ஒரு சில நிமிடங்களுக்கு பின்னர் திடீர் மின்தடை ஏற்பட்டடை அடுத்து குறுகிய காலப்பகுதிக்குள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து மாகாண ரீதியாக மின்சார விநியோகம் வழமை நிலைமைக்கு கொண்டு வரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தொடர்ந்தும் சில பகுதிகளில் மின்தடை காணப்படுகின்றது.
ஏற்கனவே பலத்த மழைபெய்த சந்தர்ப்பங்களில் பிரதான மின்சார கட்டமைப்பின் மீது மின்னல் தாக்கம் ஏற்பட்டதால் மின்சார தடை செய்யப்பட்டதாகவும் அநுர விஜேயபால தெரிவித்துள்ளார்.
அதேபோல அதுவலு கொண்ட மின்கட்டமைப்புக்குள்ளும் ஏதேனும் நிகழ்ந்திருக்க கூடும் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மின்சார சபையின் தலைவர் அநுர விஜேயபால சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.