புதியவை

இலங்கை தமிழர் தூக்கிட்டு தற்கொலை.

இலங்கை தமிழர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை - பல்லாவரம், பொழிச்சலூரை பகுதியில் இலங்கை தமிழர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

சென்னையை அடுத்த பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூரை சேர்ந்தவர் ஸ்ரீகரன் (55) இலங்கை தமிழரான இவர், கடந்த 1990-ம் ஆண்டு முதல் இங்கு வசித்து வருகிறார். 

இவரது 2 மகன்கள் நெதர்லாந்தில் வேலை பார்த்து வருகின்றனர். நீண்ட காலமாக கடுமையான தலைவலியால் ஸ்ரீகரன் அவதிப்பட்டு வந்தார். 

இதற்காக ஸ்ரீகரன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றும், அந்நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீகரன், நேற்று தனது வீட்டின் உத்திரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். 

இது தொடர்பாக சங்கர் நகர் பொலிஸார் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீகரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.