
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கைதுசெய்யுமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிடுகின்றார்.
இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சுமார் 30 இந்திய மீனவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறலைத் தடுக்கும் நோக்கிலேயே கடற்படையினருக்கு அவர்களைக் கைதுசெய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஆயினும், கடற்படையினரால் இந்திய மீனவர்களுக்கு எவ்வித துன்புறுத்தல்களும் இடம்பெறுவதில்லை என்றும் கடற்றொழில் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இந்திய – இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண்பதற்கு எண்ணியுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு நாடுகளினதும் மீனவ பிரதிநிதிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு சமாந்திரமான அமைச்சு மற்றும் இராஜதந்திர மட்டத்திலான பேச்சுகளை முன்னெடுப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.
No comments :
Post a Comment
தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.