புதியவை

நிட்டம்புவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு

நிட்டம்புவையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு



கொழும்பு – கண்டி பிரதான வீதியின் நிட்டம்புவை, மல்வத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸுடன் மோதி விபத்திற்குள்ளானதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவர் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் 22 வயதான ஆனமடுவை பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும், கண்டி, மாரஸ்ஸன பகுதியைச் சேர்ந்த 21 வயதான யுவதியும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.