புதியவை

பண்டாரகமவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் கொள்ளை


பண்டாரகம நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் பணப்பெட்ட‍கம் இன்று (12) அதிகாலை கொள்ளையிடப்பட்டுள்ளது.
வௌ்ளை வேனொன்றில் வந்த முகத்தை மறைத்திருந்த மூவர் எரிபொருள் நிரப்பு நிலைய காவலாளியை அச்சுறுத்தி பணப் பெட்டகத்தை அகபகரித்துச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
இதேவேளை இங்கிரிய நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றின் பணப்பெட்டக அறைக்குள் பிரவேசிக்க முயற்சித்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கூரையை பிரித்து வங்கிக்குள் நுழைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த சந்தர்ப்பத்தில் பொலிஸாரினால் வங்கிக்குள் பொருத்தப்பட்டிருந்தஅபாய எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து அது தொடர்பில் ஆராய்வதற்கு பொலிஸார் தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்திய சந்தர்ப்பத்தில் வங்கிக்குள் இருந்த சந்தேகநபர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளித்துள்ளார்.
இது தொடர்பில் சந்தேகமடைந்த பொலிஸார் அதிகாரிகள் குழுவொன்றை வங்கிக்கு அனுப்பியுள்ளதுடன் அந்த சந்தர்ப்பத்தில் அங்கிருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிடுகின்றது.

No comments :

Post a Comment

தங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகிறது.

தடாகம் கலை இலக்கிய வட்டம் All Rights Reserved Copyright © 2015

© Copyright 2015 byதடாகம் கலை இலக்கிய வட்டம். Theme images by Airyelf. Powered by Blogger.